• Fri. Dec 26th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் மீது ஆணையரகத்தில் புகார்

ByPrabhu Sekar

Feb 25, 2025

தினமலர் பத்திரிகை குறித்து, தரக்குறைவாக பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் மீது சென்னை தெற்கு மண்டல இணை ஆணையரகத்தில் புகார் அளித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு ஏழை எளியோர் நடுத்தர மக்கள் நல சங்கம் வலியுறுத்தினர்.

சென்னை வேளச்சேரி ஜனக்புரி தெருவில் வசித்து வருபவர் வி.எஸ்.லிங்க பெருமாள். இவர் தமிழ்நாடு ஏழை எளியோர் நடுத்தர மக்கள் நலச்சங்கத்தின் தலைவராகவும் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று சென்னை தெற்கு மண்டல இணை ஆணையரகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அந்த புகாரில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் தினமலர் பத்திரிகையை அடிமை பத்திரிக்கை என்றும், அதோடு திமுகவின் கொள்கை பரப்பு செயலாளரின் பத்திரிகை தினமலர் என்றும் அவதூறான வார்த்தைகளைக் கொண்டு தினமலர் பத்திரிகை இழிவாக பேசியுள்ளார். தினமலர் பத்திரிகையின் உரிமையாளருக்கே தெரியாமல் செய்தி போடுவதாகவும் அவதூறாக கூறியுள்ளார்.

தினமலர் உரிமையாளர் பார்க்காமலேயே செய்தி வருவதாகவும், சி.வி சண்முகம் பேசியுள்ளார். இவர் இவ்வாறு பேசியதற்கு தெளிவான ஆதாரமாக யூடியூப் சேனலில் வீடியோ உள்ளது. யூடியூப் சேனலில் இவர் பேசுவதின் நோக்கமானது தினமலர் மீதும் திமுக மீதும் அவதூறு பரப்புவதாகவும் திமுக கொள்கை பரப்பு செயலாளருக்கும் தினமலருக்கும் எந்த தொடர்பும் கிடையாது.

ஆகவே தினமலரையும் திமுகவையும் இணைத்து அவதூறு வார்த்தைகளை பேசி உள்ள முன்னாள் அ.தி.மு.க.அமைச்சர் சி.வி சண்முகம் மீதும் இதை வெளியிட்ட நபர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.