• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

வேலை வாங்கித்தருவதாக மோசடி அதிமுக பிரமுகர் மீது புகார்

ஈரோடு சூரம்பட்டிவலசு அணைக்கட்டுரோடு பகுதியை சோ்ந்த கணேசனின் மனைவி மல்லிகா (வயது 48) ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் முன்னாள் அதிமுக பிரமுகர் டி.எஸ்.ஆர் .செந்தில்ராஜா மற்றும் அவரது மகன் கிரண் மீது புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் எனது மகன் சதீஸ்குமார் பி.எஸ்சி. பட்டப்படிப்பு படித்து உள்ளார். அவர் வேலை தேடி வந்தபோது கடந்த 2017-ம் ஆண்டு ஈரோட்டை சேர்ந்த முன்னாள் அ.தி.மு.க. பிரமுகர் டி.எஸ்.ஆர் . செந்தில்ராஜா, அவரது மகன் கிரண் அரசு வேலை வாங்கி தருவதாக கூறினார்கள்.மேலும், மின்சார வாரிய அலுவலகத்தில் வேலை வாங்கி கொடுப்பதாகவும், அதற்கு மின்வாரியத்தில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு பணம் கொடுத்தால் உடனடியாக வேலை வாங்கி தருவதாக என்றும் கூறினார்.

இதுவரை மொத்தம் ரூ.13 லட்சம் அவர்களிடம் கொடுத்து உள்ளேன். ஆனால் இதுவரை அவர்கள் அரசு வேலை எதுவும் வாங்கி கொடுக்கவில்லை. இதனால் பெரும் ஏமாற்றம் அடைந்து மன வேதனைக்கு ஆளாகி பணத்தை திருப்பி கொடுக்கும்படி பலமுறை கேட்டும் அவர் கொடுக்கவில்லை. எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து என்னிடம் மோசடி செய்த ரூ.13 லட்சத்தை மீட்டு கொடுக்க வேண்டும். அந்த மனுவில் அவர் கூறி உள்ளார்.