திராவிடத்தை எருமைமாடு உடன் தொடர்புபடுத்தி சீமான் பேசியது திராவிடர்களை கொச்சைப்படுத்துவதுபோல் உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
சிவந்தி ஆதித்தனாரின் 9ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் இன்று மரியாதை செலுத்தினார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ‘ஆளுநர் மீது பழியை போடுவதற்காகவே அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுகிறார் முதலமைச்சர்’ என்று கூறினார்.பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ‘புகழ்ந்து பேசினால் விருது கொடுப்போம் என்கிறார்களா பாஜக-வினர்? இளையராஜா சொன்னது அவரது தனிப்பட்ட கருத்து. அதற்காக அவரை விமர்சிக்க வேண்டியதில்லை.
இதற்கிடையில் யுவன் சங்கர் ராஜா சில கருத்துகளை பகிர்ந்துள்ளார். ஒன்று திராவிடனாக இருங்க, இல்லையென்றால் தமிழனா இருங்க. ஏன் அதில் குழப்பம்? தேவைப்பட்டால் இந்தியன் என்கிறீர்கள், பின் தமிழன் என்கிறீர்கள்… ஏன் இத்தனை முகமூடி? யுவன் சின்னப்பிள்ளை என்பதால் புரிதல் இல்லை. கே.ஜி.எஃப் பட நடிகர் யஷ் கூட தன்னை பெருமைமிகு கன்னடிகா' என்றே கூறுகிறார். அதே போல நீங்களும்
பெருமைமிகு தமிழன்’ என்று மட்டும் சொல்ல வேண்டியது தானே? கருப்பா இருந்தால் திராவிடர் என்று பொருளா? எருமை மாடு கூடத்தான் கருப்பாக இருக்கிறது. அதற்காக எருமை திராவிடரா? உழைக்கும் மக்கள் நிறம் கருப்பாக தான் இருக்கும்’ என்றார்.
சீமானின் கருத்து குறித்து சிவந்தி ஆதித்தனாரின் 9ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்வின்போது பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ‘எருமைமாடு கூட கருப்பாக தான் இருக்கிறது, அதற்காக எருமைமாடு திராவிடர் ஆக முடியுமா என்று சீமான் கேட்டிருக்கிறார். இது திராவிடத்தை இழிவு படுத்தும் கருத்தாகும். பகுத்தறிவு உள்ளவர்கள் இதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அரசியல் ரீதியாக யார் வேண்டுமானாலும் கருத்து தெரிவிக்கலாம். ஆனால் எருமைமாடுடன் திராவிடத்தை ஒப்பிட்டு பேசுவது, திராவிடத்தை கொச்சைப்படுத்துவதாகும். அதை செய்த சீமானுக்கு எங்களது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்’ என்றார்.
தொடர்ந்து நீட் விவகாரம் தொடர்பாக பேசிய அவர், ‘முதலமைச்சர் எப்போது பார்த்தாலும் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுகிறார். முதலில் தேர்தலுக்கு முன் திமுக சொன்ன வாக்குறுதிகள் என்ன ஆயிற்று? அதை அவர்கள் ஆராய வேண்டும். ஆளுநர் மீது பழியை போடுவதற்காகவே அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுகிறார் முதலமைச்சர். மேலும், அரசியலமைப்பு சட்டத்தில் என்ன இருக்கிறதோ அதை தான் ஆளுநர் பின்பற்ற முடியும். அவருக்கு அழுத்தம் கொடுக்கலாம் ஆனால் புறக்கணிக்கக் கூடாது’ என தெரிவித்தார்.
- பொது அறிவு வினா விடைகள்1. மாகாணங்களில் செயல்பட்டு வந்த இரட்டை ஆட்சிமுறை ஒழிக்கப்பட்ட ஆண்டு எது? – 1935 தமிழகத்தில் […]
- இராமேஸ்வரம் திருக்கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களும் அவற்றின் மகிமைகளும்!இராமேஸ்வரம் புண்ணிய பூமி இராமேஸ்வரம் தல வரலாறு ராமன் சீதையை மீட்க ராவணனிடம் போர் புரிந்து […]
- மதுரையில் மருத்துவ சங்கங்கள் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்!அரசாணை 225ஐ திரும்ப பெற வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம். தமிழகத்தில் ஆரம்ப […]
- திண்டுக்கல்லில் மருத்துவ சங்கம் ஆர்ப்பாட்டம்!விடியா தி மு க ஆட்சியில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் பணி நேரத்தை ஒரு […]
- திண்டுக்கல்லில் திமுக பஞ்சாயத்து தலைவர் பொதுமக்களால் விரட்டி அடிப்பு!திண்டுக்கல் அருகே குடியிருப்பு பகுதிக்கு தண்ணீர் விடாமல் தனியார் கம்பெனிக்கு தண்ணீர் கொடுக்க முயற்சி செய்த […]
- பழனியில் தரிசனம் செய்த எடப்பாடி பழனிச்சாமி..இடைக்கால பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான […]
- ரம்மி ஆப்புகளை தடை செய்யக்கோரி தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் கோரிக்கைஇணையதளத்தில் உள்ள ஆன்லைன் ரம்மி ஆப்புகளை தமிழகஅரசு தடை செய்யக்கோரி மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் இடம் […]
- மதுரையில் சமூநீதி மாநாட்டில் முதல்வருக்கு கோரிக்கை..மதுரையில் நேற்று நடந்த சமூநீதி மாநாட்டில் இந்திய மத்திய மற்றும் மாநில அரசுகளின் பொதுக் கொள்கைத் […]
- விருதுநகர் சந்தையில் பருப்பு விலை உயர்வுகர்நாடக உள்ளிட்ட வெளி மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக விருதுநகர் சந்தையில் பருப்பு விலை […]
- எம்ஜிஆர் – ஜெயலலிதா எண்ணம் உறுதியாக நிறைவேறும் -ஓபிஎஸ்அதிமுகவை மாபெரும் இயக்கமாக மாற்றிய எம்.ஜி.ஆர், ஜெயலலிதா எண்ணம் உறுதியாக நிறைவேறும் என மதுரை விமான […]
- மாநிலங்களவை இன்றுடன் நிறைவுமாநிலங்களவை அறிவிக்கப்பட்ட தேதிக்கு 4 நாட்கள் முன்னதாகவே நிறைவு பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மழைக்கால கூட்டத்தொடரின் மாநிலங்களவை இன்றுடன் […]
- பொறியியல் கலந்தாய்வு வரும் 25-ம் தேதி முதல் தொடங்கும் – அமைச்சர் பொன்முடிதமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு வரும் 25ம் தேதி முதல் தொடங்கும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் […]
- சமூக சேவகர் ஆர்.வி. மகேந்திரன் –க்கு சிறந்த மக்கள் சேவைக்கான டாக்டர் பட்டம் …மக்கள் சேவையில் சிறப்பாக பணியாற்றயதற்காக மகேந்திரன் அவர்களுக்கு சிறந்த மக்கள் சேவைக்கான டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. […]
- சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு தேசியக்கொடி வழங்கிய அர்ஜூன் சம்பத்…சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சுவாமி தரிசனத்திற்காக வந்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் […]
- மதுரையில் சமூநீதி மாநாட்டில் முதல்வருக்கு கோரிக்கை..மதுரையில் நேற்று நடந்த சமூநீதி மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அரசு சமூகநீதியை உண்மையாக […]