• Sat. Sep 26th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

சாத்தூரில் 100 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா..,

ByK Kaliraj

Sep 25, 2026

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சத்திரப்பட்டியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

சத்திரப்பட்டியில் உள்ள திருமண மஹாலில் நடைபெற்ற இந்த விழாவில் விருதுநகர் மாவட்ட தனியார் சிபிஎஸ்சி, மெட்ரிகுலேஷன், பள்ளியின் சங்க தலைவர் பரமேஸ்வரி, பிரம்மன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சாத்தூர்,சத்திரப்பட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 100 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விழா நடத்தி வைத்து வளைகாப்பு சீர்களை வழங்கினார்கள்.

மேலும் கர்ப்ப காலத்தில் பெண்கள் சத்தான உணவு பொருட்களை சாப்பிட வேண்டும் எனவும் பாதுகாப்பான முறையில் இருக்க வேண்டும் எனவும் பெண்களுக்கு அறிவுறுத்தினார்,

இந்நிகழ்வில் ஏராளமான கர்ப்பிணி பெண்கள் சமூகநலத்துறை அதிகாரிகள், தவெகவினர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.