• Sat. Dec 20th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கவர்னரை கண்டித்து கம்யூனிஸ்டு பேரணி

ByA.Tamilselvan

Nov 15, 2022

கேரள கவர்னரை கண்டித்து கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியினர் திருவனந்தபுரத்தில் பேரணி நடத்தி நடத்தினர்.
கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்டு கூட்டணிக்கும், கவர்னர் ஆரிப்முகமது கானுக்கும் மோதல் நிலவி வருகிறது. அரசு விவகாரங்களில் கவர்னர் தலையிடுவதாக முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டினார். கேரள சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க மறுக்கிறார் என்றும் அவர் கூறினார். பல்கலைக்கழக வேந்தர் பதவியிலிருந்து கவர்னரை நீக்குவது தொடர்பாகவும், மாநில அமைச்சரவை கூட்டத்தில் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று திருவனந்தபுரத்தில் கம்யூனிஸ்டு கட்சியினர் பேரணி நடத்தினர். இந்த பேரணியில் ஏராளமான கம்யூனிஸ்டு தொண்டர்கள் பங்கேற்றனர்.