மூன்று வேளாண் சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெறவில்லை என்றால் நாட்டின் பலபகுதிகளில் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்றும் முத்தரசன் எச்சரித்தார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்த போது, நிலக்கரி இருப்பு விவகாரம் புரியாத புதிராக மத்திய அரசு இருந்து வருகிறது. பல மாநிலங்கள் இருளில் மூழ்கும் பேரபாயம் ஏற்பட்டுள்ளது எனக் கூறினார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலையை மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும், சமூக விரோதிகளை கட்சியில் சேர்த்துக்கொண்டு பாஜக தமிழகத்தில் கட்சியை பரப்ப பார்க்கிறது. அது பலிக்காது என்றும், நகர்புற வேலைவாய்ப்பு திட்டத்திற்காக, 100 கோடி ரூபாய் நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.
மூன்று வேளாண் சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெறவில்லை என்றால் நாட்டின் பலபகுதிகளில் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்றும் முத்தரசன் எச்சரித்தார். திமுக கூட்டணி பெரும் வெற்றி பெற செய்து பொதுமக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்பார்ப்பையும் திமுக மேல் வைத்திருப்பதை காட்டியுள்ளனர். அரசியல்வாதிகளுக்கு வெற்றியைக் கொண்டாடவும் தெரிய வேண்டும், தோல்வியை ஏற்றுக் கொள்ளவும் தெரிய வேண்டும் என்றும் கூறியவர், சட்டம்-ஒழுங்கை காப்பதில் தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இருப்பினும் ஆங்காங்கே நடைபெறும் சிறு, சிறு குற்ற சம்பவங்களை தடுக்கவும் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.