• Tue. Jun 16th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

வரிசையில் நின்று 7 மணி முதல் வாக்கை பதிவு செய்த வாக்காளர்கள்..,

ByRadhakrishnan Thangaraj

Apr 23, 2026

தமிழக முழுவதும் 2026 காண சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விருதுநகர் மாவட்டத்தில் ஏழு தொகுதிகளிலும் மொத்தம் 1509518 வாக்காளர்கள் இன்று வாக்கு பதிவு செய்ய உள்ளனர்.

இராஜபாளையத்தில் பெண் வாக்காளர்கள் 104157லட்சம் பேரும் ஆண் வாக்காளர்கள் 110002 லட்சம் வாக்காளர்களும் மூன்றாம் பாலின வாக்காளர்கள் 33 பேர் என மொத்தம் 214192 வாக்காளர்கள் உள்ளனர். காலையிலிருந்து தங்களுடைய ஜனநாயக கடமை ஆற்றுவதற்காக காலை ஏழு மணிக்கு வரிசையில் நின்று ஆர்வத்துடன் பதிவு செய்து வருகின்றனர்.

குறிப்பாக இராஜபாளையம் ஆர் ஆர் நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இராஜபாளையம் தொழிலதிபர் குவைத் ராஜா 7:00 மணிக்கு வரிசையில் நின்று தனது வாக்கை செலுத்தினார். அதேபோல் முதல் வாக்காளர்களும் ஆர்வத்துடன் வாக்கு செலுத்த வருகின்றனர்.