• Wed. Mar 11th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

பெண் காவலர்களை பாராட்டிய நெல்லை மாநகர காவல் ஆணையாளர்

Byதரணி

Apr 18, 2023

தமிழக காவல் துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, நெல்லை சரக அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கம் வென்ற போலீசாரை நேரில் அழைத்து பாராட்டிய நெல்லை மாநகர காவல் ஆணையாளர் .


தமிழக காவல் துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, நெல்லை சரக அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் Carbine பிரிவில் முதலிடம் பெற்ற ஆயுதப்படை பெண் காவலர் 1169 செல்வி.ராமலட்சுமி மற்றும் மூன்றாமிடம் பெற்ற பெருமாள்புரம் பெண் தலைமை காவலர் 1407 திருமதி.கற்பக ராஜலட்சுமி ஆகிய இருவரையும் நெல்லை மாநகர காவல் ஆணையாளர் ராஜேந்திரன் ஐபிஎஸ் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். உடன் மாநகர தலைமையிட காவல் துணை ஆணையாளர் அனிதா, மாநகர ஆயுதப்படை காவல் ஆய்வாளர் , மற்றும் மாநகர ஆயுதப்படை காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.