ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நம்பியூர் ஒன்றியத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
நம்பியூர் பஸ் நிலையம் முன்பு வைக்கப்பட்ட அவரது உருவப்படத்திற்கு நம்பியூர் ஒன்றிய செயலாளர்கள் தம்பி சுப்பிரமணியம், ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் நம்பியூர் ஒன்றிய குழு தலைவர் சுப்பிரமணியம், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கௌசல்யா, அதிமுக கட்சி நிர்வாகிகள் நம்பியூர், எலத்தூர் பேரூராட்சி செயலாளர்கள் கருப்பணன்,சேரன்சரவணன்,வழக்கறிஞர் கங்காதரன், எம்.எம். செல்வம் அதிமுக மாவட்ட தகவல் தொடர்பு துணைத் தலைவர் மனோகரன்,ஊராட்சி மன்ற தலைவர்கள் மணிகண்ட மூர்த்தி,சிவக்குமார்,திருமூர்த்தி,பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஒன்றைக் குழு உறுப்பினர்கள் கட்சி நிர்வாகிகள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.