

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். பீஸ்ட் படம் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
அப்படத்தை தொடர்ந்து வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். தளபதி 66 என பெயரிடப்பட்டுள்ள அந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாகவுள்ளது. தளபதி 66 படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கவுள்ளார்.
இந்நிலையில் தற்போது ‘தளபதி 66’ படத்தின் ஹீரோயின் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
