• Thu. Jan 23rd, 2025

ரசிகரின் கேள்வி! கோபத்தில் ஸ்ருதி!

தமிழ் சினிமாவில் பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து பிரபலமானவர் ஸ்ருதி ஹாசன். தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

ஸ்ருதி அசாம் மாநிலம் கவுகாத்தியைச் சேர்ந்த சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது காதலருடன் நெருங்கி இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவார். மேலும் அடிக்கடி அவர் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளிப்பார்.

அவ்வாறு அண்மையில் அவரிடம் ரசிகர் ஒருவர், உடம்பில் எந்தெந்த பாகங்களில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தீர்கள்’ என கேட்டுள்ளார். அதற்கு ஸ்ருதி, இது உங்களுக்கு தேவை இல்லாத ஒன்று என கோபமாக பதிலளித்து பின் மூக்கில் மட்டும் என கூறியுள்ளார் அந்த பதிவு வைரலாகி வருகிறது.