ரயில் விபத்துகளை தவிர்ப்பதற்காக புதிய சென்சார் மூலம் தானியங்கி முறையில் இயங்கும் புதிய கருவியை மதுரையை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
குறைந்த செலவில் ரயில் விபத்துகளை தவிர்க்க பொறியியல் மாணவர்களின் கண்டுபிடிகளை மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், மத்திய அரசு ஏற்று செயல்படுத்த அரசுக்கு மாணவர்கள் கோரிக்கை”
மதுரை திருப்பரங்குன்றம் அருகேயுள்ள பாலாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் – மீனாட்சி தம்பதியினர். ராஜேந்திரன் பிஆர்சி-யில் நடத்தனராக இருந்து ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். மகன் ஜெய விஷ்ணு மதுரையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு (EEE) பொறியியல் படித்து வருகிறார். இதே பகுதியை சேர்ந்த செல்வகுமார் மாரீஸ்வரி தம்பதியின் மகன் கார்த்திக் ராஜா.

ஜெய விஷ்ணு, கார்த்திக் ராஜா இருவரும் நண்பர்கள், இருவரும் ஒரே பொறியியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து (EEE) வருகின்றனர்.
ஜெய விஷ்ணு, கார்திக் ராஜா இருவரும் இணைந்து ரயில் விபத்துகளை தவிர்க “ரயில்வே பாயிண்ட் மிஷின் ஸ்டேட்டஸ் மானிட்டரிங் சிஸ்டம் ” இந்த புதிய கண்டுபிடிப்பு மூலம் 3 கிலோ மீட்டர் முன்பே ரயில் ஒட்டுனருக்கு சிக்னல் வழங்கப்படும். இதன் மூலம் ரயில்விபத்துகள் தவிர்க்கப்படலாம்.
ஜெய விஷ்ணுவிற்கு சிறுவயதில் இருந்தே ரயில்கள் மீது அதிக ஆர்வம் இருந்து வந்துள்ளது. வீட்டில் அதிகம் இருந்ததை விட ரயில்வே ஸ்டேஷனிலேயே அதிக நேரம் செலவிட்டுள்ளார்.

இந்நிலையில் கல்லூரி படிப்பின் இறுதி ஆண்டு ப்ராஜெக்ட்டுக்காக ஜெயா விஷ்ணு மற்றும் அவரது நண்பர் கார்த்திக் ராஜா இருவரும் சேர்ந்து ரயில் விபத்துக்களை தவிர்ப்பதற்காக புதிய சென்சார் கருவி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார்.
ஜெய விஷ்ணு மற்றும் கார்த்திக் ராஜா இருவரும் ரயில் விபத்துகளை தடுக்கும் பொருட்டு ரயில்வே பாய்ண்ட் மிஷின் ஸ்டேட்டஸ் சர்வீஸ் சிஸ்டம் (RPM SSS) என்னும் புதியசென்சார் கருவியை தயாரித்துள்ளனர் இதன் மூலம் விபத்து நடப்பதை மூன்று கிலோமீட்டர் முன்னதாகவே அறிந்து தவிர்த்து விடலாம் என கூறுகின்றனர் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த ஜெயவிஷ்ணு மற்றும் கார்த்திக் ராஜா கூறியதாவது

இது குறித்து ஜெய விஷ்ணு கூறுகையில்..,
ஒரிசா ரயில் விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் ஏற்படாமல் இருக்கும் வகையில் புதிதாக ரயில் பாய்ண்ட் மிஷன் ஸ்டேட்டஸ் வெரிஃபிகேஷன் சர்வீஸ் சிஸ்டம் டிவைஸ் என்பதை கண்டுபிடித்துள்ளேன். இதன் மூலம் ரயில் ஒரு ரயில் நிலையத்தை அடைவதற்கு முன்பாகவே நேரடியாக அங்குள்ள சிக்னலை பார்த்து அந்த ஓட்டுனர் தெரிந்து கொள்வதற்கு முன்பு மூன்று கிலோமீட்டருக்கு முன்பாகவே இந்த பாயிண்ட் மிஷின் ஸ்டேடஸ் டிவைஸ் மூலம் அடுத்து வரவுள்ள ரயில் நிலையத்திற்கு செல்வது குறித்து தகவல் வந்துவிடும்.
இந்த தகவலை அடுத்து ரயில் நிலையத்திற்கு முன்பாக உள்ள பாயிண்ட் சிக்னலை பார்த்து டூஸ்டப் வெரிஃபிகேஷன் மூலம் ரயில் நிலையத்தை கடக்கலாம்.

ஒருவேளை பாய்ண்ட் மெஷின் ஃபெயிலியர் ஏற்படும் பட்சத்தில் இந்த சென்சார் டிவைஸ் மூலம் கிடைக்கும் தகவலை வைத்து ரயிலின் வேகத்தை குறைத்து நிறுத்தவோ அல்லது ரயில் நிலையத்தில் தொடர்பு கொண்டு அடுத்த கட்ட நகர்வு குறித்து தெரிந்து கொண்டு ரயிலை இயக்குவதற்கு எளிதாக இருக்கும்.
இந்த டிவைஸ் மூலம் நிச்சயம் ஒரிசா ரயில் விபத்து மற்றும் நேற்று திருவள்ளூரில் நடைபெற்ற ரயில் விபத்துகள் போன்று இனி வரும் காலங்களில் நிச்சயமாக தவிர்க்கலாம்.
மேலும் இது குறித்து இந்த கருவியின் விவரங்களை இந்தியன் ரயில்வே துறையின் நிர்வாகத்திற்கு அனுப்பி உள்ளதாகவும் ஜெய விஷ்ணு கூறினார்.

புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ரயில்வே பாய்ண்ட் மெஷின் ஸ்டேட்டஸ் மானிட்டரிங் சர்விஸ் சிஸ்டம் (RPM SMS) ஒவ்வொரு ரயில் சிக்னலிலும் நிறுவுவதற்கு குறைந்தபட்சமாக முப்பதாயிரம் ரூபாய் செலவாகும் எனக் கூறியுள்ளார்.
மதுரை பொறியியல் மாணவர்கள் ஜெய விஷ்ணு, மற்றும் கார்திக்ராஜாவின் கண்டுபிடிப்புகளை மத்திய அரசு ரயில் நிலையங்களில் அமைத்தால் குறைந்த செலவில் விலை மதிப்பில்லாதா மனித உயிர்கள் பலியாவதை தவிர்க்கலாம்.