• Sun. Nov 10th, 2024

மழைநீரில் மூழ்கிய காரில் சிக்கிய இருவர்

ByKalamegam Viswanathan

Oct 13, 2024

மதுரை மணிநகரம் ரயில்வே தரைப்பாலத்தில் மழைநீரில் மூழ்கிய காரில் சிக்கிய இருவரை காப்பாற்றிய காவலர் மற்றும் பொதுமக்கள் L&O ADGP டேவிட்சன் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

மதுரையில் நேற்றிரவு மூன்று மணி நேரத்திற்கு பெய்த கன மழையால் மணிநகரம் ரயில்வே தரைப்பாலத்தில் வெள்ள நீரில் மூழ்கிய தரைப்பாலத்தில் சிக்கி மூழ்கி கொண்டிருந்த காரில் சிக்கிய மதுரை கோச்சடை பகுதியை சேர்ந்த கோபி மற்றும் ரமேஷ் ஆகிய இருவரை துரிதமாக செயல்பட்ட காவலர் தங்கமுத்து மற்றும் மணிநகரத்தை சேர்ந்த கார்த்தி மற்றும் சந்திரசேகர் ஆகியோர் ஆள் உயர தண்ணீரில் இறங்கி மீட்டனர். இதனை தொடர்ந்து காவலர் தங்கமுத்து, மனிநகரத்தை சேர்ந்த கார்த்தி மற்றும் சந்திர சேகரின் நற்செயலை பாராட்டி தமிழ்நாடு காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் கூடுதல் இயக்குனர் டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் பரிசுகள் வழங்கி வெகுவாக பாராட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *