• Mon. Feb 2nd, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

கூடலூர் அருகே கார் விபத்தில் கல்லூரி மாணவர் பலி..!

கூடலூர் அருகே உள்ள ஓவேலி பகுதியில் இருசக்கர வாகனமும் வாடகை காரும் மோதியதில் கல்லூரி மாணவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள ஓவேலி பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் சபரி இவரது மகன் சஜீவ் 17 கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருவதாக கூறப்படுகிறது. இவர் நேற்று கல்லூரி முடிந்து இருசக்கர வாகனத்தில் சென்ற போது இருசக்கர வாகனமும் எதிரே வந்த வாடகைக்காரன டாடா சுமோ மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்,

தகவல் அறிந்த காவல்துறையினர் சஜீவின் உடலை பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர் மேலும் விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.