• Sat. Sep 13th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

குளிர் பானங்கள் வழங்க ஆட்சியர் அனுமதி தேவை..,

ByKalamegam Viswanathan

Apr 17, 2025

மதுரை மாவட்டம் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, மண்டகபடிகள் மற்றும் இலவச அன்னதானம், பிரசாதம், குளிர்பானங்கள், நீர்மோர் மற்றும் குடிநீர் வழங்கும் நபர்கள் இணைய வழியில் கட்டணம் செலுத்தி பதிவுச் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் என, மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, தெரிவித்தார். மதுரை மாவட்டத்தில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் திருக்கல்யாணம் மற்றும் அருள்மிகு கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுதல் தொடர்பான மண்டகபடிகளில் மற்றும் இதர இடங்களில் அன்னதானம் வழங்குதல் மற்றும் பக்தர்களால் வழங்கப்படும் பிரசாத உணவுகள், சர்பத், குளிர்பானங்கள், நீர் மோர், இனிப்புகள் மற்றும் குடிநீர் ஆகியவை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பாதுகாப்பான உணவாக செயற்கை சாயங்கள் எதுவும் சேர்க்காமல் வழங்க வேண்டும்.

மேலும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகள், பிளாஸ்டிக் கப்புகள் ஆகியவற்றை முழுமையாக தவிர்க்க வேண்டும். அன்னதானம் வழங்குபவர்கள் மற்றும் பெறுபவர்கள் சாப்பிட்ட பின்பு அன்னதானம் வழங்கும் இடங்களில் சேரும் கழிவுகள் முறையாக சேகரித்து மாநகராட்சி குப்பை தொட்டியில் கொண்டு சேர்க்க வேண்டும். அதேபோல், கோடை காலத்தை முன்னிட்டு அமைக்கப்படும் தற்காலிக குளிர்பான விற்பனை இடங்கள், உணவகங்கள் மற்றும் இலவச குடிநீர் பந்தல்கள் ஆகியவற்றிலும் தரமான குடிநீர் செயற்கை சாயங்கள் அற்ற உணவுகளை விற்பனை செய்ய வேண்டும். திருவிழாவை முன்னிட்டு, மண்டகபடிகள் மற்றும் இலவச அன்னதானம், பிரசாதம், குளிர்பானங்கள், நீர்மோர் மற்றும் குடிநீர் வழங்கும் நபர்கள் https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் இணைய வழியில் (Online) மூலம் ரூ.100/- கட்டணம் செலுத்தி விண்ணப்பித்து மதுரை மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் அனுமதி (பதிவுச் சான்றிதழ்) பெற்று மட்டுமே வழங்க வேண்டும்.

மேலும், உணவு மற்றும் உணவுப் பொருள் தொடர்பான புகார்களுக்கு தமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்பு துறை கட்செவி (Whatsapp No.) எண்.94440 42322-க்கு தொடர்பு கொண்டு புகார்கள் தெரிவிக்கலாம். மேலும், அன்னதானம் வழங்குவோர் உணவு பாதுகாப்பு சட்ட பதிவுச்சான்றிதழ் பெறுவதற்கு தேவையான விபரங்களை மதுரை மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் அலுவலக தொலைபேசி எண் (0452-2640036)-க்கு தொடர்பு கொண்டு தகவலினை பெற்றுக் கொள்ளலாம் என்று, மாவட்ட ஆட்சித் தலைவர் நாள் : 17.04.2025

மதுரை மாவட்டம் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மண்டகபடிகள் மற்றும் இலவச அன்னதானம், பிரசாதம், குளிர்பானங்கள், நீர்மோர் மற்றும் குடிநீர் வழங்கும் நபர்கள் இணைய வழியில் கட்டணம் செலுத்தி பதிவுச் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம்.

மாவட்ட ஆட்சித் தலைவர்
திருமதி.மா.சௌ.சங்கீதா, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
மதுரை மாவட்டத்தில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் திருக்கல்யாணம் மற்றும் அருள்மிகு கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுதல் தொடர்பான மண்டகபடிகளில் மற்றும் இதர இடங்களில் அன்னதானம் வழங்குதல் மற்றும் பக்தர்களால் வழங்கப்படும் பிரசாத உணவுகள், சர்பத், குளிர்பானங்கள், நீர் மோர், இனிப்புகள் மற்றும் குடிநீர் ஆகியவை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பாதுகாப்பான உணவாக செயற்கை சாயங்கள் எதுவும் சேர்க்காமல் வழங்க வேண்டும்.

மேலும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகள், பிளாஸ்டிக் கப்புகள் ஆகியவற்றை முழுமையாக தவிர்க்க வேண்டும். அன்னதானம் வழங்குபவர்கள் மற்றும் பெறுபவர்கள் சாப்பிட்ட பின்பு அன்னதானம் வழங்கும் இடங்களில் சேரும் கழிவுகள் முறையாக சேகரித்து மாநகராட்சி குப்பை தொட்டியில் கொண்டு சேர்க்க வேண்டும். அதேபோல், கோடை காலத்தை முன்னிட்டு அமைக்கப்படும் தற்காலிக குளிர்பான விற்பனை இடங்கள், உணவகங்கள் மற்றும் இலவச குடிநீர் பந்தல்கள் ஆகியவற்றிலும் தரமான குடிநீர் செயற்கை சாயங்கள் அற்ற உணவுகளை விற்பனை செய்ய வேண்டும். திருவிழாவை முன்னிட்டு, மண்டகபடிகள் மற்றும் இலவச அன்னதானம், பிரசாதம், குளிர்பானங்கள், நீர்மோர் மற்றும் குடிநீர் வழங்கும் நபர்கள் https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் இணைய வழியில் (Online) மூலம் ரூ.100/- கட்டணம் செலுத்தி விண்ணப்பித்து மதுரை மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் அனுமதி (பதிவுச் சான்றிதழ்) பெற்று மட்டுமே வழங்க வேண்டும்.

மேலும், உணவு மற்றும் உணவுப் பொருள் தொடர்பான புகார்களுக்கு தமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்பு துறை கட்செவி (Whatsapp No.) எண்.94440 42322-க்கு தொடர்பு கொண்டு புகார்கள் தெரிவிக்கலாம். மேலும், அன்னதானம் வழங்குவோர் உணவு பாதுகாப்பு சட்ட பதிவுச்சான்றிதழ் பெறுவதற்கு தேவையான விபரங்களை மதுரை மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் அலுவலக தொலைபேசி எண் (0452-2640036)-க்கு தொடர்பு கொண்டு தகவலினை பெற்றுக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.மா.சௌ.சங்கீதா, இ.ஆ.ப., அவர்கள் தெ
மா.சௌ.சங்கீதா, வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.