• Tue. Sep 8th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா மருத்துவமனை, பள்ளி வளாகம் மற்றும் மைதானம் உள்ளிட்ட இடங்களில் திடீர் ஆய்வு..,

ByP.Thangapandi

Sep 8, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா தலைமையில் சார் ஆட்சியர் உத்கர்ஷ் குமார், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை இணை இயக்குனர் ராமச்சந்திரன் மற்றும் வருவாய் துறையினருடன் திடீர் ஆய்வு மேற்கொண்டரார்.,

இதில் மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மேதிரம் வைக்கும் பெட்டகத்தை பார்வையிட்டு கண்காணிப்பு கேமராக்கள் இணைக்கும் அறையினை பார்வையிட்டு பாதுகாப்பு குறித்து மருத்துவ அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.,

தொடர்ந்து டி.இ.எல்.சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம், காசநோய் பிரிவு மைதானம், அரசு மேல்நிலைப் பள்ளி மைதானம் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி மைதானம் உள்ளிட்டவைகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.,

இதில் தொடர்ந்து உசிலம்பட்டி டிஎஸ்பி ஜெய்கணேஷன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் ஆலோசனைகளை கேட்டறிந்து சென்றார்.,