• Fri. Jun 26th, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

போதை பொருள் ஒழிப்பு மாபெரும் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தினை தொடங்கி வைத்த ஆட்சியர் அருணா..,

Byமுகமதி

Jun 26, 2026

புதுக்கோட்டை முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் மாவட்ட நிர்வாகம்,தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து,நடத்தும் சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள், தன்னார்வலர்கள், இளைஞர்கள், அரசு அலுவலர்கள் பங்கேற்கும் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து ஸ்டார்ட் ரன், ஸ்டாப் ட்ரக்ஸ் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் மு.அருணா இன்று 26/06/2026 கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தொலைநோக்குப் பார்வை மிக்க தலைமையின் கீழ் தமிழக அரசு விளையாட்டை ஒரு சக்தி வாய்ந்த சமூக மாற்ற கருவியாக கருதி செயலாற்றி வருகிறது. இளைஞர்களின் ஆற்றலை ஆக்கபூர்வமான வழியில் செலுத்தி ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவித்து சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தை உருவாக்குவதே அரசின் தலையாய நோக்கமாகும். போதை பொருள் இல்லாத தமிழகம் என்ற உன்னத இலக்கை நோக்கிய பயணத்தில் தூய்மையான நேர்மையான மற்றும் அறநெறி சார்ந்த விளையாட்டு கலாச்சாரத்தை வளர்த்தெடுப்பதில் தமிழக அரசு உறுதி கொண்டுள்ளது.

அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26 ஆம் தேதி சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஜூன் 26ம் நாள் சர்வதேச போதை பொருள் பயன்பாடு மட்டும் சட்டவிரோத கடத்தல் எதிர்ப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஸ்டார்ட் ரன், ஸ்டாப் ஸ்ரக்ஸ், விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தினை தொடங்கி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து போதை பொருள் ஒலிப்பு நிகழ்ச்சியில் மாபெரும் கையெழுத்து இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டது. போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டமானது மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் தொடங்கி ரயில் நிலையம், ரவுண்டானா, டிவிஎஸ் கார்னர், பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் வழியாக விளையாட்டு அரங்கத்தில் முடிவுற்றது.

போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் 5 கிலோமீட்டர் தூரம் நடைபெற்றது. போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாறத்தான் ஓட்டத்தில் 1000 கற்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி, மாணவ மாணவிகள் பங்கேற்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் சர்வதேச போதைப் பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற மாரத்தான் நிகழ்ச்சியில் போதைப் பொருள் ஒழிப்பு சுய புகைப்படம் மாவட்ட ஆட்சித் தலைவர் எடுத்துக்கொண்டார்.

முன்னதாக போதைப் பொருள் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்ட பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழை கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் ந.சுப்பிரமணியன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் ந. சுப்பிரமணியன், மாநகராட்சி ஆணையர் என். காந்தி ராஜ், புதுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியர் பிரகாஷ், புதுக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் பிருந்தா, மாவட்ட விளையாட்டு அலுவலர் குணசேகரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சண்முகம், வளைகோல் பந்து பயிற்றுனர் அன்பழகன், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் இளைஞர்கள், ஆகியோர் கலந்து கொண்டனர்.