



திருவிதாங்கூர் மன்னர் ஆட்சியின் காலம் தொட்டு இன்றுவரை கேரள மாநிலத்திற்கு, தெய்வத்தின் பூமி என்னும் சிறப்பு பெயர் இன்றும் மக்களிடேய பழக்கத்தில் இருக்கிறது.
எடத்துவா புனித ஜார்ஜியார் திருத்தல ஆலயம் 2000_ம் ஆண்டுகள் பழமையானது. மதம்,மொழி, இனம் கடந்து அனைத்து நிலை மக்களும் வணங்கும் புனித ஜார்ஜியார் ஆலயத்தின், இவ்வாண்டு திருவிழா எதிர் வரும் (ஏப்ரல்27)ம் தொடங்கி, எதிர் வரும் (மே_14)ம் தேதி வரை மொத்தம் 17 நாட்கள் திருவிழா நடைபெறவுள்ளது.


இவ்வாலயத்தின் திருவிழா திருக்கொடியேற்றம் ஏப்ரல் மாதம் 27_ம் தேதி அதிகாலை 5.45.,மணி அளவில் நடைபெற இருப்பதையும். குறிப்பாக விழாவில் நான்கு திருப்பலி களை தமிழகத்தை சேர்ந்த ஆயர்களும்,4_ங்கு திருப்பலி களை கேரள மாநிலத்தை சேர்ந்த ஆயர்களும் திருப்பலி நிறைவேற்ற உள்ளார்கள்.

கேரள மாநிலத்தில் நடக்கும் விழா என்றாலும். குமரி மாவட்டத்தின் ஆரோக்கியபுரம் முதல் பல்வேறு கடற்கரை பகுதியை சேர்ந்த கிறிஸ்தவ மக்கள் எடத்துவாவில் குடும்பத்துடன் போய் பல நாட்கள் தங்கி திருவிழா திருப்பலியில் பங்கேற்பது பல பல்லாண்டுகளாக தொடரும் நிகழ்வு.
தக்கலை மறைவாட்ட ஆயர் தாமஸ், எடத்துவா திருத்தல அதிபர் அருட்பணி அனீஸ், அருட் பணி ஜோஸ், மைலாடி பங்கு தந்தை ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.

