• Mon. Mar 23rd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

இடிந்துவிழும் நிலையில் அங்கன்வாடி மையம்- அச்சத்தில் பெற்றோர்

Byvignesh.P

Jul 6, 2022

தேனி மாவட்டம் அம்மச்சியாபுரம் கிராமத்தில் விபத்து ஏற்படும் முன் அங்கன்வாடிமையத்தை முறையாக பராமரிக்க வேண்டும் என்று அங்கன்வாடி மைய குழந்தைகளின் பெற்றோர்கள் கோரிக்கை
தேனி மாவட்டம் அமச்சியாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அம்மச்சியாபுரம் கிராமத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.

இந்த அங்கன்வாடிமையத்தில் 35 குழந்தைகள் பயின்று வருகின்றனர்.இந்த அங்கன்வாடி கட்டிடம் மிகவும் மோசமான நிலையில் கட்டிடங்கள் ஆங்காங்கே விரிசல் விட்டும் இடிந்து விழும் நிலையில் உள்ளது எனவும் மேலும் அங்கன்வாடி மையத்தில் முறையான மின்சார வசதி குடிநீர் வசதி இல்லை என்றும் குழந்தைகளின் பெற்றோர்கள் கூறுகின்றனர்.எனவே குழந்தைகளை அங்கன்வாடிமையத்திற்கு அனுப்பிவிட்டு மிகுந்த அச்சத்துடனும் பயத்துடனுமே தினந்தோறும் இருந்து வருகிறோம்


எனவே குழந்தைகளின் தாய் தந்தையர்கள் இந்த அங்கன்வாடி மைய கட்டிடத்தை ஏதேனும் விபத்து ஏற்படும் முன் பழுது பார்த்து முறையான குடிநீர் மற்றும் மின்சாரவசதி எற்படுத்தி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.