• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தங்கப்பதக்கதை தட்டி சென்ற கோவை மாணவி!

BySeenu

Apr 12, 2025

கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் (GCT) பொறியியல் படிப்பில் முதுகலை இறுதி ஆண்டு படித்து வரும் திலோத்தம்மா எனும் மாணவி தேசிய அளவிலான சவாலான மலைச் சைக்கிள் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

மார்ச் 28 முதல் 31 வரை ஹரியானாவில் நடைபெற்ற 21வது மூத்த, ஜூனியர் மற்றும் சப் ஜூனியர் தேசிய மவுண்டன் பைக் சைக்கிள் சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்கள் எலீட் – டவுன்ஹில் (Downhill) பிரிவில் தங்கப்பதக்கம் பெற்றுள்ளார்.

இதுகுறித்தான செய்தியாளர் சந்திப்பு இன்று சித்தாபுதூரில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. இதில் திலோத்தம்மா மற்றும் அவர் பயிற்சியாளர் கோகுல் கிருஷ்ணன் கலந்துகொண்டனர். அப்போது பேசிய அவர்கள் இந்த அதிக ஆபத்தான டவுன்ஹில் பிரிவில் பங்கேற்ற தென்னிந்தியாவின் முதல் மற்றும் ஒரே பெண் வீராங்கனை இவர் தான் என்றும் நாட்டில் ஏறத்தாழ 3-4 பெண்கள் மட்டுமே இதில் பங்கேற்கிறார்கள், என அவரின் பயிற்சியாளர் கோகுல் கிருஷ்ணன் தெரிவித்தார்.

பின்னர் பேசிய திலோத்தமா தமிழ்நாடு சைக்கிள் அசோசியனில் இருந்து புள்ளிகள் கிடைத்ததும், நான் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற வாய்ப்புள்ளது. போதிய ஆதரவு கிடைத்தால், உலக மேடைகளில் வெற்றி பெற்று என் மாநிலத்தையும் நாட்டையும் பெருமைப்படுத்த விரும்புகிறேன்,என்றார்.