• Fri. Mar 29th, 2024

மத்திய அரசின் ஜிஎஸ்டி அறிமுகத்தால் மாநிலங்களுக்கு நிதிச்சுமை-முதல்வர் ஸ்டாலின்

Byகாயத்ரி

Sep 3, 2022

மத்திய அரசு ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தியதால் மாநிலங்களுக்கு நிதிச்சுமை உண்டாகிறது எனத் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சி அமைத்தது. அதன்பின், ஜிஎஸ்டி வரியை நாடு முழுவதும் அமல்படுத்தியது. இந்த நிலையில், கேரளா மா நிலம் கோவளம் பகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் 30 வது தென்மண்டலக் கவுன்சில் கூட்டம் இன்று நடந்தது. இக்கூட்டடத்தில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின், ஜிஎஸ்டி வரியை அமல்படுத்தியதில் இருந்து மாநிலங்களுக்கு நிதிச்சுமை ஏற்பட்டுள்ளதாகவும், மாநிலங்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு தொகைக்கான காலம் நீட்டிப்பதுடன், நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *