மதுரை மாநகராட்சி எல்லை உட்பட்ட வைகை ஆறு அமைந்துள்ள பகுதிகளில் குறிப்பாக ஆரப்பாளையம் பேருந்து நிலையம் செல்லும் வழியிலும் மற்றும் யானைகள் பாலம் ஒப்புலா படித்துறை பாலம் உள்ளிட்ட பகுதிகளில் மர்ம நபர்கள் தினசரி வைகை ஆற்று உள்பகுதியில் குப்பைகளை எரிப்பதால் விண்ணை முட்டும் அளவிற்கு புகை பரவி வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது.

இதனால் வாகன ஓட்டிகள் மட்டுமல்லாது அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சுவாச கோளாறு மற்றும் சுற்றுச்சூழல் மாசும் ஏற்படுகிறது இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர்கள் தீவிர கண்காணிப்பை ஏற்படுத்த வேண்டும் எனவும் இது போன்ற செயல்படும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வைகை ஆற்றை பாதுகாக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலரின் கோரிக்கையாக உள்ளது.
இது தினசரி இந்நிகழ்வு நடைபெற்று வருவதால் இதை வைக்கும் நபர்கள் யார் என்று தெரியவில்லை. மதுரை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்குமா என எதிர்பார்ப்புடன் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும்.




