
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மற்றும் மாவட்ட ஆட்சியர் சங்கீதா அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர் இந்த நிலையில் ஏறுதழுவுதல் அரங்கத்தில் தூய்மைப் பணிகளை மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தூய்மை பணியாளர்கள் செய்திருந்தனர் இதில் ஒரு பகுதியாக சோழவந்தான் பேரூராட்சி சார்பில் பேரூராட்சி தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன் அறிவுறுத்தலின் பேரில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மற்றும் செயல் அலுவலர் ஏற்பாட்டில் தூய்மை பணியினை துப்புரவு ஆய்வாளர் முருகானந்தம் தலைமையில் பணியாளர்கள் சுமார் 20க்கும் மேற்பட்டோர் தூய்மை பணியினை மேற்கொண்டனர்.
