

2024 ஆம் ஆண்டு நாடுமுழுவதுக்குமாக மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் இறுதி பட்டியல் தயார் செய்து சமீபத்தில் வெளியிட்டதை தொடர்ந்து மக்களவை தேர்தலுக்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக மதுரை புதுஜெயல் ரோடு பகுதியில் மக்களவை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் அடங்கிய விளம்பர பதாகைகள் கொண்ட வாகனங்கள் தமிழக முழுவதும் உள்ள மாவட்டங்களுக்கு அனுப்படுகிறது.

