• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

பிக்பாஸ் வீட்டிற்குள் மோதல், தள்ளுமுள்ளு வைரல் வீடியோ

ByA.Tamilselvan

Oct 26, 2022

தற்போது விஜய்டிவியில் ஒளிபாரப்பாகி வரும் பிக்பாஸ் -6 ல் போட்டியாளர்களிடையே மோதல் தள்ளுமுள்ளு நடைபெற்ற வீடியோ வைரல் ஆகி வருகிறது.
ஆண்டுதோறும் வரும் பண்டிகைகள் போல, ஆண்டுக்கு ஒரு முறை தொடங்கும் பிக்பாஸ் நிகழச்சிக்கு இங்கு பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு. விஜய் டிவியில் தொடங்கிய நாள் முதல், ஒவ்வொரு சீசனும் பெரிய ஹிட் அடித்திருந்தது. கடந்த முறை சீசன் 5 வரை பொதுமக்கள் மத்தியில் பெரிய பிரபலமானது. போதாக்குறைக்கு பிக்பாஸ் அல்டிமேட் என்கிற சீசனும் தொடங்கப்பட்டு, அதுவும் பெரிய அளவில் வெற்றியை பெற்றது. பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியும் தற்போது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்தவாரம் “நீயும் பொம்மை நானும் பொம்மை” என்ற டாஸ்க் நடந்து வருகிறது. இந்த சூழலில் இன்று வெளியாகி உள்ள புதிய ப்ரோமோவில் இந்த டாஸ்க்கின் போது போட்டியாளர்களுக்குள் கடுமையான தள்ளுமுள்ளு நிகழ்கிறது. நிவாசினி மற்றும் ஷெரினாவை தள்ளிவிட்டதற்காக தனலட்சுமியை பார்த்து நீயும் ஒரு பொண்ணுதான” என்று ஆசீம் கேட்கிறார். எப்படியோ பிக்பாஸ் என்றாலே மோதல் தள்ளுமுள்ளு என்றாகிவிட்டது.