விருதுநகர் நகராட்சி அலுவலகம் முன்பு மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய தொழிலாளர் சட்டத்தை கண்டித்து சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்பாட்டத்திற்கு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை மாவட்ட செயலாளர் விஜயபாண்டி தலைமை தாங்கினார்.

சிஐடியு மாவட்ட துணைச்செயலாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். மத்திய தொழிலாளர் சட்டம் 44 பிரிவுகளாக இருந்ததை 4 சட்ட தொகுப்புகளாக திருத்தம் செய்ததை கண்டித்து பழைய தொழிலாளர் சட்டத்தை அமல் படுத்த கோரி சிஐடியு சார்பில் விருதுநகர் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர் . இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு V. பாலமுருகன், K.பாலமுருகன் , CPM நகர செயலாளர் ஜெயபாரத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.









