மதுரை மாநகராட்சி 84 வது வார்டு பகுதியில், 40 நாட்களுக்கு மேலாக தண்ணீர் வராததை கண்டித்து, பொதுமக்கள் பத்மா தியேட்டர் அருகே காலி குடத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மதுரை அவனியாபுரம் அருகே உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் பகுதியில் 400 குடியிருப்புகள் கட்டப்பட்டு பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.


இந்தப் பகுதியில் எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லை எனக் கூறி பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்து வந்த நிலையில் கடந்த 40 நாட்களுக்கு மேலாக குடிநீர் வரவில்லை. சாக்கடை தூர் வாராமல் தெருக்களில் ஓடுகிறது என புகார் தெரிவித்தும் மதுரை மாநகராட்சி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை .

அவனியாபுரம் குடிசை மாற்று வாரிய பொதுமக்கள் காலி குடத்துடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது தகவல் அறிந்த அவனியாபுரம் காவல் சரக உதவியாளர் சீதாராமன், ஆய்வாளர் லிங்கப்பாண்டி மற்றும் மாநகராட்சி பொறுப்பு உதவி பொறியாளர்செல்வ விநாயகம் போக்குவரத்து காவல்துறையினர் போராட்டகாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.












; ?>)
; ?>)
; ?>)