• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் உண்டியல் எண்ணிக்கை

ByKalamegam Viswanathan

Dec 31, 2024

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் உண்டியலில் இருந்து 44,43,563 ரூபாய் ரொக்கமும், 66 கிராம் தங்கமும், 1 கிலோ 130 கிராம் வெள்ளியும் கிடைக்கப் பெற்றது.

தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்பரமணியசுவாமி கோயிலில் இன்று உண்டியல் திறந்து எண்ணப்பட்டது

இதில் காணிக்கையாக ரூபாய் 44 லட்சத்து 43 ஆயிரத்து 563 ரூபாய் ரொக்கமாகவும், 66 கிராம் தங்கமும், 1 கிலோ 130 கிராம் வெள்ளியும் உண்டியல் மூலம் கிடைக்கப் பெற்றது.

திருப்பரங்குன்றம் கோயில் உண்டியல் மாதம் ஒருமுறை திறந்து எண்ணப்படுவது வழக்கம். இந்த நிலையில் இந்த மாதத்திற்கான உண்டியல் இன்று திறந்து எண்ணப்பட்டது.

அதில் பணம் ரூ.44 லட்சத்து, 43 ஆயிரத்து 563 ரூபாய், தங்கம் 66 கிராம், வெள்ளி 1 கிலோ 130 கிராம் இருந்தது.

இதில் திருப்பரங்குன்றம் கோயில் கண்காணிப்பாளர் முன்னிலையில் திருப்பரங்குன்றம் பக்தர்கள் பேரவை உறுப்பினர்கள் மற்றும் அருள்மிகு ஆண்டவர் சுப்பிரமணிய சுவாமி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் இந்த உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.