• Sat. Mar 22nd, 2025

“டாஸ்மாக்”கடையை அகற்ற கோரிக்கை.., காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர், ஆட்சியரிடம் மனு.

தமிழக கேரள எல்லை பகுதியான கோழிவிளை சந்திப்பில்.

இந்து கோவில், பள்ளிவாசல், தேவாலயம், மருத்துவமனை என மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் ராஜேஷ் குமார், அந்த பகுதியில் உள்ள பொது மக்கள் நீண்ட காலமாகவே சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்ற கோரிக்கை வைத்து வரும் நிலையில்,

அண்மையில் மதுவிலக்கு துறை கூடுதல் பொறுப்பாக கொடுக்கப்பட்டுள்ள அமைச்சர் முத்துசாமி, அவர் பொறுப்பேற்ற சில நாட்களிலே.தமிழகத்தில் 500_டாஸ்மாக்குகள் மூடப்படும் என அறிவித்த நிலையில், குமரி மாவட்டம் கோழிவிளை பகுதி மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை ஏற்பட்டது. அந்த பகுதி மக்கள் காரிய, காரணங்களுடன் தமிழக, கேரள எல்லைப் பகுதியான கோழிவிளை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை தமிழக அரசு அகற்றி விடும் என நம்பினார்கள். குமரி மாவட்டத்தில் 12 டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்ட நிலையில், மக்களின் நீண்ட கால கோரிக்கையான கோழிவிளை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றாத நிலையில், கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் ராஜேஷ் குமார், காங்கிரஸ் மீனவர் அணி தலைவர் ஜார்ஜ் ராபின்சன், ஓபிசி பிரிவு தலைவர் ஸ்டூவர்ட் மற்றும் அப்பகுதியில் உள்ள பொது நல ஆர்வலர்கள் ஆகியோர் குமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர்யை அவரது அலுவலகத்தில் சந்தித்து, அந்த பகுதி மக்களின் சம்பந்தப்பட்ட கோழிவிளை டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை மனுவை கொடுத்தனர்.

சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமாரிடம் செய்தியாளர்கள் ஆட்சியருக்கு கொடுத்துள்ள மனு குறித்து கேட்டபோது.

டாஸ்மாக் கடையை கோவில், தேவாலயம், பள்ளி வாசல் மற்றும் மருத்துவ மனை இருக்கும் பகுதியி என்பதால் எப்போதும் மக்கள் நடமாட்டம்,வாகனங்களின் போக்குவரத்து நிறைந்த பகுதியில்.”டாஸ்மாக்”கடை அமைக்க கூடாது என்று அரசின் ஆணை இருக்கும் நிலையில், தமிழக அரசின் ஆணைக்கு எதிராக செயல்படும் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்ற அந்த பகுதி மக்களின் நியாயமான நீண்ட கால கோரிக்கை மாவட்ட நிர்வாகத்தில் பரிசிலினை செய்யப்படமால் காலம் கடந்து வருவதை குறித்தும், இனியும் காலம் கடத்தாமல், சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என எங்களது மனுவில் தெரிவித்துள்ளோம் எனவும் தெரிவித்தார் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார்.