• Fri. Dec 12th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

சினிமா பாக்ஸ்ஆபீஸ் வசூல் சீறிய சித்தார்த்

சினிமா படங்கள் வசூல் பற்றியபாக்ஸ் ஆபிஸ் தகவல்களை கூறுவதற்கு எவ்வளவு கமிஷன் பணம் வாங்குகிறீர்கள் என நடிகர் சித்தார்த் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் நான்கு ஹீரோக்களில் ஒருவராக தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் சித்தார்த். சமூக வலைத்தளங்களில் சமரசமற்ற பதிவுகளை வெளியிட்டு வருபவர்
நடிகர் சித்தார்த் பெரும்பாலும் சமூக பிரச்சனைகள் மற்றும் அரசியல் குறித்த கருத்துக்களை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளிப்படுத்துபவர். அண்மையில் பொய் சொன்னால் முதல்வராக இருந்தாலும் கன்னத்தில் அறைவேன் என்று உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தை குறிப்பிட்டு சித்தார்த் பதிவிட்டிருந்தது இணையத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது.


இந்நிலையில் பாக்ஸ் ஆபிஸ் தகவல்கள் குறித்து சித்தார்த் விமர்சனம் செய்து பதிவிட்டுள்ள ட்வீட் இணையத்தில் மட்டுமல்லாது சினிமா வட்டாரத்தில்பரபரப்பை கிளப்பியுள்ளது.இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு படத்தின் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் வெளியிடுவதற்கு எவ்வளவு கமிஷன் பெற்று வருகிறீர்கள்? ‘முன்பெல்லாம் தயாரிப்பாளர்கள் மட்டுமே பாக்ஸ் ஆபிஸ் தகவல் குறித்து பகிர்ந்து வந்தார்கள்.ஆனால் தற்போது வர்த்தக பணியாளர்கள், மீடியாக்கள் என பலர் அத்தனை மொழிகளிலும் பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட்டை போலியாக பகிர்ந்து வருகிறார்கள் என்று பதிவிட்டுள்ளார்.


எந்தவித ஆதாரமும் இன்றி பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் பகிரப்பட்டு வருவதை விமர்சித்து சித்தார்த் பகிர்ந்துள்ள பதிவிற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.