• Sat. Oct 3rd, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

வம்பு வனிதா சமந்தா போன்று ஐட்டம் பாடலுக்கு தயாராகிறாரா?

நடிகை வனிதா விஜயகுமார் பிக்பாஸ் சீசன்நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு சின்னத்திரையில் இருந்து வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. அதனை தொடர்ந்து சினிமாவிலும் தொடர்ச்சியாக வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் வனிதாவின் இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போதே பல சர்ச்சைகள் வனிதாவை சுற்றி அரங்கேறின. அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் வலைத்தளத்தில் பலரும் பதிவுகள் பகிர்ந்து வந்தனர். அதன்பின்னர் பிக்பாஸில் இருந்து வெளியில் வந்த பிறகு குக் வித் கோமாளி, கலக்கப்போவது யார்? பிக்பாஸ் ஜோடிகள் என பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.


சினிமாவிலும் நடித்து வரும் வனிதா யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் புதிய படம் ஒன்றில் ஐட்டம் பாடலுக்கு நடனமாட உள்ளதாக தெரிவித்துள்ளார் வனிதா. இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘காத்து’ என்ற படத்தில் கானா பாலா பாடும் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடி உள்ளதாகவும் மேலும் கலர்கலரான காஸ்ட்யூமில் வனிதா பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அண்மையில் வெளியான அல்லு அர்ஜுனின் ’புஷ்பா’ படத்தில் நடிகை சமந்தா ஆடிய ஐட்டம் டான்ஸ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.