• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல்லில் கிறிஸ்துமஸ் விழா..,

ByS.Ariyanayagam

Dec 25, 2025

திண்டுக்கல்லு கிறிஸ்துமஸ் விழா நடந்தது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த திண்டுக்கல் மேட்டுப்பட்டி புனித வியாகுல அன்னை ஆலயத்தில் வித்தியாசமான முறையில் வேரில் இருந்து பிறந்த குழந்தை இயேசு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

வருடம் தோறும் டிசம்பர் 25ஆம் தேதியை கிறிஸ்மஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.இதனையொட்டி அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் 24 ஆம் தேதி நள்ளிரவில் கிறிஸ்மஸ் சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டது. திண்டுக்கலில் 96 கிராமங்களின் தாயகமாக விளங்கும் திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் 350 ஆண்டுகள் பழமையான புனித வியாகுல அன்னை தேவாலயத்தில் அருள்தந்தை அருமைசாமி தலைமையில் பங்குத்தந்தை செல்வராஜ்,
உதவி பங்குத்தந்தை ஜஸ்டின் பால்சன் , அருள்தந்தையர்கள் பீட்டர் ராஜ், லாரன்ஸ்,திருத்தொண்டர் அருள் அஜித் குமார் ஆகியோரால் சிறப்பு கிறிஸ்மஸ் பாடற்திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

திருப்பலியின் நடுவே நள்ளிரவு சரியாக 12 மணிக்கு கோவில் நுழைவாயில் முன்புறம் இருந்து வால் நட்சத்திரம் தோன்றி ஆலய பலி பீடத்தை சென்றடைந்த பின் மனித வாழ்வுக்கு அன்பே ஆணிவேர் என்பதை உணர்த்தும் விதமாக அன்பின் அடையாமான பூவை வேர் எடுத்துவர அதிலிருந்து பாலன் இயேசு (குழந்தை இயேசு)
பிறப்பது போன்று வித்யாசமான முறையில் காட்சி வடிவமைக்கப்பட்டிருந்தது.
குழந்தை இயேசு பிறந்த போது ஆலயத்திலிருந்த அனைவரும் கரவொலி எழுப்பி ஆரவாரமாகவும் உற்சாகமாகவும் வரவேற்றனர்.மேலும், ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

இந்த கிறிஸ்துமஸ் திருப்பலியில் திருத்தொண்டர்கள், அருட் சகோதரிகள், பங்கு மக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆலய வளாகம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, ஆலயத்தில் உள்ளே சிறப்பாக குடில் ஆலய அலங்கார குழுவினரால். அமைக்கப்பட்டிருந்தது. திருப்பலியில் பங்கேற்ற அனைவருக்கும் கிறிஸ்துமஸ் கேக் வழங்கப்பட்டது.இந்த கிறிஸ்துமஸ் விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பங்குத்தந்தை மற்றும் பங்குமக்கள் செய்திருந்தனர்.