இராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் குருத்தோலை ஞாயிறு தினத்தை முன்னிட்டு ஏராளமான கிறிஸ்தவர்கள் குருத்தோலை கையில் ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.
அந்தோணியார் தெரு மற்றும் சவேரியார் தெருவில் வசித்து வரும் பரதவ உறவின் முறை சார்ந்த கிறிஸ்துவர்கள் தவக்காலத்தின் இறுதி குருத்து ஞாயிற்றுக் கிழமையான நேற்று, கருவாட்டுப்பேட்டை பகுதியில் இருந்து ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் உட்பட 500 க்கும் மேற்பட்ட கிறிஸ்துவர்கள் குருத்தோலை கையில் ஏந்தி ஊர்வலமாக
புனித அந்தோனியார் ஆலயம் வரை சென்று சிறப்பு திருப்பலி மற்றும் ஆராதனையில் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். இந்த ஊர்வலத்தில் சுற்று வட்டார பகுதியில் உள்ள ஏராளமான கிறிஸ்தவர்களும் கலந்து கொண்டனர்.