• Fri. Jan 24th, 2025

இந்த முறையாவது இமானுவேல் சேகரன் பெயரை மதுரை விமான நிலையத்துக்கு வைக்க உதவுவீர்களா? தேவேந்திர குல வேளாளர் சங்கம் வேட்பாளர் நவாஸ்கனியிடம் கோரிக்கை

இந்த முறையாவது இமானுவேல் சேகரன் பெயரை மதுரை விமான நிலையத்துக்கு வைக்க உதவுவீர்களா? தேவேந்திர குல வேளாளர் சங்கம் வேட்பாளர் நவாஸ்கனியிடம் கோரிக்கை வைத்தனர்.

இராமநாதபுரம் பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக அதன் கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் முகைதீன் தனது கட்சிக்கு இராமநாதபுரம் தொகுதி ஒதுக்கீடு செய்ய கேட்டதின் அடிப்படையில் இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியானது இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. கட்சியின் துணைத்தலைவரான நவாஸ்கனி இராமநாதபுரம் பாராளுமன்ற வேட்பாளராக போட்டியிடுகிறார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள்முதல் தனக்கு ஆதரவு தருமாறு அனைத்து சமுதாய சங்க தலைவர் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். இன்று (24.03.2024) முதுகுளத்தூர் வட்டார தேவேந்திர குல வேளாளர் சங்க தலைவர் எஸ்.எம்.சேகர், செயலாளர் ஆர்.பி.ஜெயகாந்தி, ஜி.ராம்கி மற்றும் நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கோரினார். தேவேந்திர குல வேளாளர் சங்கம் சார்பாக சில அதன் நிர்வாகிகள் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது. குறிப்பாக சுதந்திர போராட்ட தியாகி இமானுவேல் சேகரனார் பெயரை மதுரை விமான நிலையத்துக்கு சூட்ட வேண்டும் என பல ஆண்டுகளா கோரிக்கை வைத்து வருவதாகவும், அதற்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. தாங்களும் கடந்த ஐந்தாண்டுகளை பாராளுமன்ற உறுப்பினராக நிறைவு செய்துள்ளீர்கள் மீண்டும் நீங்கள் பாராளுமன்ற உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டால் மதுரை விமான நிலையத்துக்கு தியாகி இமானுவேல் சேகரனார் பெயர் சூட்ட மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். பாராளுமன்ற வளாகத்தில் தியாகி இமானுவேல் சேகரனாருக்கு முழு உருவ வெண்கல சிலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது குருபூசை நாளை அரசு விழாவாக அறிவிக்க மாநில அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். என்ற கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது.