

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே அமைந்துள்ள கல்வி சர்வதேச பொதுப்பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் நடந்த கைப்பந்து போட்டியில் தங்க பதக்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.
சி.பி.ஸ்.இ பள்ளிகளுக்கு இடையேயான மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டிகள் மதுரை சர்வேயர் காலனி மகாத்மா மாண்டிசோரி பள்ளியில் நடைபெற்றது இதில் மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே அமைந்துள்ள கல்வி சர்வதேச பொதுப்பள்ளி மாணவர்கள் 12,14,17,19 வயதுக்குட்பட்ட பிரிவில் பங்கு பெற்று 12,14 ஆடவர் பிரிவிலும் 17 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவிலும் தங்க பதக்கமும் 17 ஆடவர் பிரிவிலும் 12 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவிலும் வெள்ளி பதக்கமும் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்கள், கைப்பந்து பயிற்சியாளர் .பிரபுக்குமார், உடற்கல்வி துறை ஆசிரியர்கள் சரவணபாலஜி, முகேஷ், .கார்த்திக், கார்த்திகாயினி, செல்வி.நந்தினி ஆகியோர்களை பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது.