• Tue. Jun 25th, 2024

சோழவந்தான் மன்னாடிமங்கலம் ஸ்ரீமுத்தையாசாமி மாரியம்மன் திருக்கோவில் மகாகும்பாபிஷேக விழா

ByN.Ravi

May 23, 2024

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, மன்னாடிமங்கலம் கிராமம் கல்லாங்காடு தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்தையா சாமி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு ,கடந்த 22 ஆம் தேதி புதன்கிழமை மாலை 6 மணிக்கு முதல் காலயாக வேள்வி, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து, இரவு 9 மணி அளவில் கணபதி ஹோமம், நடைபெற்று21 பந்தி தெய்வங்களின் ஹோமம் மற்றும் பரிகார தேவதை ஹோமங்கள் மகாபூர்ணாகதி நடைபெற்று மகா தீபாராதனையுடன் முதல் காலையாக பூஜை நிறைவு பெற்றது. தொடர்ந்து , இன்று காலை மங்கள இசையுடன் விக்னேஸ்வர பூஜை தொடங்கி, கோமாதா பூஜை, கன்னியா பூஜை, பூஜையுடன், முத்தையா சாமிக்கு 21 பந்தி தெய்வங்கள் மற்றும் பரிவார தெய்வங்களின் விசேஷ மூலிகை ஹோமங்கள் பூஜையுடன் மகாபூர்ணாகதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, காலை 9 . 35 மணிக்கு முத்தையா சாமி மாரியம்மன் கோபுரங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும், சோழவந்தான் தொழிலதிபர் பாஜக விவசாய அணி மாநிலத் துணைத் தலைவர் எம். வி. எம். மணி முத்தையா, சோழவந்தான் பேரூராட்சி 13வது வார்டு கவுன்சிலர் வள்ளி மயில், 8-வது வார்டு கவுன்சிலர் அரிமா சங்கத் தலைவர் டாக்டர் எம் மருது பாண்டியன் குடும்பத்தினர் செய்திருந்தனர். தொடர்ந்து, பொதுமக்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. அன்னதானத்தை, எம். வி.எம். குடும்பத்தினர் தொடங்கி வைத்தனர். கும்பாபிஷேகத்திற்கான பூஜைகள் அனைத்தும் சோழவந்தான் ஸ்ரீ வே வரதராஜ் பன்டிட்ஜி தலைமையில் அர்ச்சகர்கள், யாக வேள்வி மற்றும் பூஜைகள் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *