• Sun. Jun 16th, 2024

சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

ByN.Ravi

May 23, 2024

மதுரை மாவட்டம் சோழவந்தான் திரௌபதை அம்மன் கோவில் பூக்குழி திருவிழா மகாபாரதத்தில் வரக்கூடிய கதைக்கேற்ப பாத்திரத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்வும் நடந்தது.பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. நிகழ்ச்சியை முன்னிட்டு காலை வைகை ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து பூக்குழி மைதானத்தில் தெளித்தனர்.பின்னர் பூ வளர்த்தனர். பகல் 2 மணியளவில் அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு பூக்குழி மண்டகப்படியில் வந்து சேர்ந்தது.அங்கு அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்று காமதேனு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.மாலை 6 மணியளவில் பரம்பரை அறங்காவலர்கள் அர்ச்சுனன், திருப்பதி,ஜவஹர்லால், குப்புசாமி மற்றும் பக்தர்கள் பூக்குழி இறங்கினார்கள். இதில் பேரூராட்சி தலைவர் ஜெயராமன், மாவட்ட திட்டக் குழு உறுப்பினர் வக்கீல் சத்திய பிரகாஷ், கவுன்சிலர் மருதுபாண்டியன், சங்கோட்டை கிராம நல சங்க தலைவர் வக்கீல் சிவகுமார் ,செயல் தலைவர் முத்துப்பாண்டி, செயலாளர் சேகரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இதைத்தொடர்ந்து அம்மன் சங்கங்கோட்டைகிராமம்,முதலியார்கோட்டை கிராமம்,ரயில்வேபீடர்ரோடு வழியாக மார்க்கெட் ரோடு,நான்குரதவீதி பவனி வந்து கோவிலை வந்தடைந்தது. சங்கங்கோட்டை கிராமத்தார்கள் பூக்குழி திருவிழா ஏற்பாடுகளை செய்திருந்தனர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டிதலைமையில் போலீசார், தீயணைப்பு நிலைய அலுவலர் மற்றும்தீயணைப்பு படை வீரர்கள் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *