• Mon. Jul 13th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா

ByKalamegam Viswanathan

Apr 25, 2023

சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது .கோவில் நிர்வாகிகள் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர்.கலந்து கொண்டனர்…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா கொடியேற்றம் நேற்று இரவு நடைபெற்றது விழாவானது மொத்தம் 12 நாட்கள் நடைபெறுகிறது நேற்று இரவு கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது இவ்விழாவை முன்னிட்டு பிரசாந்த் சர்மா தலைமையில் பூஜைகள் நடந்தது பரம்பரை அரங்காவலர்கள் அர்ஜுனன் திருப்பதி குப்புசாமி செயல் அலுவலர் இளமதி கோவில் ஆலோசகர் முன்னாள் சேர்மன் முருகேசன் வருட பொறுப்பாளர் பரம்பரை அறங்காவலர் ஜவஹர்லால் ஆகியோர் முன்னிலையில் திருவிழா கொடி ஏற்றப்பட்டது முன்னதாக கொடி சோழவந்தானின் நான்கு ரத வீதிகளில் மேளக்தாளத்துடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கோவிலை வந்தடைந்தது பின்னர்கோவிலில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது இதில் சோழவந்தான் பேரூராட்சி தலைவர் ஜெயராமன் துணைத் தலைவர் லதா கண்ணன் பேரூர் திமுக செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் கவுன்சிலர்கள் முத்துச்செல்வி மற்றும் கோவில் நிர்வாகிகள் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர்.கலந்து கொண்டனர்…