• Fri. Jan 2nd, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சிவகாசியில் சித்திரை பொங்கல் திருவிழா

ByK Kaliraj

May 8, 2025

சிவகாசியில் சித்திரை பொங்கல் திருவிழா விமர்சையாக நடைபெறுகிறது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பத்திரகாளி அமமன் கோவிலில் கடந்த 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா தொடங்கியது. 11 நாட்கள் நடைபெற்ற இந்த திருவிழாவில் தினமும் அம்மன் காமதேனு, அன்னபட்சி, சிம்ம வாகனங்களில் எழுந்துருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

தொடர்ந்து தினமும் திருவிழா கமிட்டியினர் சார்பில், கலை நிகழ்ச்சிகள், வானவேடிக்கை, பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் இன்று கரும்புள்ளி செம்புள்ளி குத்துதல், நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

தொடர்ந்து முடி காணிக்கை, முத்து செலுத்துதல், கயிறு குத்து திருவிழா நடைபெற்றது. பறவை காவடி எடுத்து பக்தர் வீதி விழா நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.