• Fri. Jul 10th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் 14-வது இடம்

ByK Kaliraj

May 8, 2025

விருதுநகர் மாவட்டத்தில் +2 அரசு பொதுத்தேர்வு-96.64 % மாணவ, மாணவிகள் சதவீதம் தேர்ச்சி. மாநில அளவில் 7-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது. மாநில அளவில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் 14-வது இடத்தை பெற்றுள்ளது.

+2 அரசு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3-ம் தேதி தொடங்கி 25 ஆம் தேதி முடிவடைந்தது. விருதுநகர் மாவட்டத்தில் +2 அரசு பொதுத்தேர்வை 10,092 மாணவர்கள், 11,686 மாணவிகள் என மொத்தமாக 21,778 பேர் தேர்வு எழுதி இருந்தனர்.

இதில் 9,613 மாணவர்கள், 11,433 மாணவிகள் என மொத்தமாக 21,046 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். +2 தேர்வு மாணவிகள் 97.84 % சதவீதமும், மாணவர்கள் 95.25% சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். 2.59 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

+2 பொதுத்தேர்வில் 96.64% தேர்ச்சி சதவீதம் பெற்று மாநில அளவில் 7-வது இடம் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு 6வது இடத்தில் இருந்து 7-வது இடத்திற்கு அதே தேர்ச்சி சதவீதம் பெற்று பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மாநில அளவில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் 14-வது இடத்தை பெற்றுள்ளது.

விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் இரண்டரை சதவீதம் குறைந்துள்ளது அதிகம். இது குறித்து ஆய்வு செய்யப்படும். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகள், கோ எட் பள்ளிகளில் மாணவர்களின் நிலை மேம்படுத்தப்படும் என தகவல் தெரிவித்துள்ளார்.