• Fri. Jul 10th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

ரூ.25 ஆயிரம் நிதி உதவி அளித்த, முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி

ByK Kaliraj

May 8, 2025

விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நடுவப்பட்டியில் சாம்பியன் கிரிக்கெட் கிளப் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் சக்தி மாரியம்மன் கோவில் இரண்டாம் ஆண்டு பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, கிரிக்கெட் போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டது. வரும் 12ஆம் தேதி கிரிக்கெட் போட்டி தொடங்குகிறது.

இதனை அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைக்க வருகை தர வேண்டும் என விழா கமிட்டியினர் அழைப்பிதழ் கொடுத்து கோரிக்கை வைத்தனர்.

அழைப்பிதழை பெற்றுக் கொண்டு கிரிக்கெட் போட்டியை சிறப்பாக நடத்துமாறும் விழாவில் கலந்து கொள்வதாகவும் உறுதி அளித்தார். மேலும் கிரிக்கெட் போட்டி சிறப்பாக நடத்த ரூபாய் 25 ஆயிரம் நிதி உதவி அளித்தார்.