• Tue. Apr 16th, 2024

சிப்ஸ், நக்கெட்ஸ் மட்டும் போதும்…22 வருடங்களாக இதை மட்டும் உண்ணும் பெண்…

Byகாயத்ரி

Mar 13, 2022

ஜங்க் புட் என்னும் சிப்ஸ், சிக்கன் நக்கெட்ஸ் போன்ற துரித உணவுகள் உடலுக்கு கேடு விளைவிக்கும் என்றும், பழங்கள் மற்றும் காய்கறிகள் உடலுக்கு நன்மை பயக்கும் என்று தான் நாம் கேள்விப்பட்டு இருப்போம். துரித உணவுகள் உண்பதை பெரும்பாலும் தவிர்க்க சொல்லித்தான் நாம் கேட்டிருப்போம். ஆனால் இங்கு ஒரு பெண் கிட்டத்தட்ட 22 வருடங்களாக இதுபோன்ற உணவுகளை மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழ்ந்து வருகிறார்.

லண்டனின் கேம்பிரிட்ஜ் மாகாணத்தை சேர்ந்தவர் சம்மர் மோன்ரோ. 25 வயதான இந்த பெண் ஒரு தீவிர நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். எஆர்எப்ஐடி எனப்படும் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் இந்த பெண் கடந்த 22 வருடங்களாக காய்கறிகள், பழங்கள் போன்ற எதையும் உண்ணாமல் சிக்கன் நக்கெட்ஸ், உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்ற துரித உணவுகளையே உணவாக உட்கொண்டு வருகிறார். எஆர்எப்ஐடி என்பது ஒரு வகையான உணவு கோளாறு நோயாகும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு குறிப்பிட்ட உணவின் சுவை, மனம் மற்றும் வெப்பநிலை போன்றவற்றிற்கே அடிமையாகிவிடுவார்கள். அந்த உணவை தவிர வேற உணவை இவர்கள் எப்போதும் உண்ணமாட்டார்களாம். இவர் எப்பொழுதும் காலையில் உணவருந்தாமல், மதியம் வால்கர் க்ரிஸ்ப்ஸ் சிப்ஸ்களையும், இரவு உணவாக ஆறு அல்லது எட்டு பர்ட்ஸ் ஐ சிக்கன் நக்கெட்சுகளையும் சாப்பிடுவாராம்.

மேலும் இவர் சாதாரண உணவை உண்ண விருப்பம் கொள்ளமாட்டாராம், அப்படியே அந்த உணவுகளை உண்டாலும் இவரது உடல் அவற்றை ஏற்றுக்கொள்வதில்லை. சில ஹிப்னோதெரபிஸ்டுகளும் முயன்றும் கூட இவரை சாதாரண உணவை உண்ணவைக்க முடியாமல் தோற்று போயுள்ளனர். இதுகுறித்து அவர் கூறுகையில் நான் மிகவும் மிருதுவான உணவை தான் உண்ணுகின்றேன், அவை மிகவும் மொறுமொறுப்பாக சுவையாகவும், உண்ணுவதற்கு எளிதாகவும் இருக்கிறது. ஆனால் காய்கறிகள், பழங்கள் போன்றவை இவ்வாறு இல்லை, அவை உண்பதற்கும் எளிதாக இல்லை என்று கூறியுள்ளார். இதுபோன்ற உணவுகளை அவர் உண்ணுவதால் அவரின் உடல் எடை சமசீராக இல்லாமல் ஏற்ற இறக்கமாகவே உள்ளது என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *