• Fri. Apr 26th, 2024

ரஷ்யாவின் சேனல்கள் உலகம் முழுவதும் முடக்கம்…

ரஷ்ய அரசின் சேனல்களை யூ டியூப் நிறுவனம் உலகம் முழுவதும் அதிரடியாக முடக்கியுள்ளது. ஐரோப்பிய யூனியன், நேட்டோ அமைப்புகளில் உக்ரைன் இணைவதற்கு ரஷ்யா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

எனினும் உக்ரைன் அலட்சியம் காட்டியதால், அந்நாட்டின் மீது ரஷ்யா போரை தொடுத்துள்ளது. இதனால் உக்ரைன் உருகுலைந்து வருகிறது. அரசு அலுவலக கட்டிடங்கள், ராணுவ தளங்களை ரஷ்யா அழித்து வருகிறது.

இதனிடையே, போரை நிறுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வரும் நிலையில், யுத்தம் முடிவுக்கு வருவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளது என கூறப்படுகிறது. ரஷ்யா – உக்ரைன் மோதல் விவகாரத்தில் உக்ரைனுக்கு ஆதரவாக பல்வேறு நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார நடவடிக்கையை எடுத்து வருகின்றன. பல்வேறு நிறுவனங்களும் ரஷ்யாவில் இருந்து வெளியேறி வருகிறது.

இந்நிலையில் யூ டியூப் நிறுவனம் ரஷ்ய அரசின் சேனல்களுக்கு அதிரடி தடை விதித்துள்ளது. இந்த சேனல்களில் உள்ள வீடியோக்கள், யூ டியூபின் விதிகளை மீறியுள்ளதாகவும், வன்முறை அதிகம் நிறைந்த காட்சிகள் பதிவேற்றம் செய்யப்படுவதாகவும் யூ டியூப் கூறியுள்ளது.

உக்ரைன் மீது படையெடுக்கும் ரஷ்யாவின் நடவடிகை, தங்களது விதிகளை மீறுவதாக உள்ளதென்று யூடியூப் விளக்கம் அளித்துள்ளது. முன்னதாக ரஷ்ய ஆதரவு ஊடகங்கள், அரசு ஊடகங்களுக்கு ஐரோப்பிய நாடுகளில் மட்டுமே யூ டியூபால் தடை விதிக்கப்பட்டிருந்தன. தற்போது இந்த தடை உலகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *