• Sat. Apr 20th, 2024

பூட்டானில் இரு கிராமங்களை கட்டி எழுப்பி வரும் சீனா!

பூட்டான் நாட்டின் பிராந்தியத்தில் இரண்டு கிராமங்களை சீன தேசம் கட்டி எழுப்பி வருவதாக செய்தி வெளியிட்டுள்ளது NDTV செய்தி நிறுவனம்.

பிரத்யேக சாட்டிலைட் புகைப்படங்களின் அடிப்படையில் இதனை அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதுவும் இந்தியாவும், சீன படையினருக்கும் இடையே கடந்த 2017-இல் மோதல் வெடிக்க இருந்த இடமான டோக்லாம் பகுதிக்கு அருகே இந்த கிராமங்கள் அமைந்துள்ளதாம்.சீன வீரர்கள் அந்த பகுதியில் 2017-இல் சாலையை கட்டமைக்கும் பணியில் ஈடுப்பட்டிருந்தனர். அதனை இந்திய படை வீரர்கள் தடுத்து நிறுத்தினர். அதன் பிறகு சீனா மாற்றுவழியை கடைபிடித்ததாக சொல்லப்படுகிறது.கடந்த 2020 நவம்பர் மாதத்தில் எடுக்கப்பட்ட சாட்டிலைட் புகைப்படத்தையும், அண்மையில் எடுத்த புகைப்படத்தையும் ஒப்பிட்டு பார்த்ததில் இது தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஆராய்ச்சியாளர் டேமியன் சைமன் என்பவர் முதன்முதலில் கவனித்துள்ளார். அதை அறை வடிவிலான கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை இந்த படத்தின் மூலம் அறிந்து கொள்ள முடிவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *