• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஒடிசாவில் ‘சந்திராயன்’ என பெயர் சூட்டப்பட்ட குழந்தைகள்..!

Byவிஷா

Aug 25, 2023

விண்வெளி துறையில் இந்தியா சரித்திர சாதனை படைத்துள்ள நிலையில், ஒடிசாவில் பிறந்த நான்கு குழந்தைகளின் பெற்றோர்கள், தங்களது குழந்தைகளுக்கு ‘சந்திராயன்’ என பெயர் சூட்டி மகிழ்ந்துள்ளனர்.
இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமானது சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டரை வெற்றிகரமாக நிலவில் இறக்கியது. இதனால் விண்வெளி துறையில் இந்தியா சரித்திர சாதனை படைத்துள்ளது. நிலவின் மேற்பரப்பில் செயற்கைகோள் இறங்கிய நேரத்தில் ஒடிசா மாநிலம் கேந்திரபாரா மாவட்ட ஆஸ்பத்திரியில் பிறந்த 3 குழந்தைகளுக்கு ‘சந்திரயான்’ என பெயரிடப்பட்டது.
‘விக்ரம்’ லேண்டர் மெதுவாக தரையிறங்கி சாதனை படைத்ததை நினைவுகூரும் வகையில் ஒரு பெண் குழந்தை உள்பட 4 குழந்தைகளுக்கு ‘சந்திரயான்’ என்னும் பெயரை பெற்றோர்கள் சூட்டி உள்ளனர்.