

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு, அக்கட்சி தலைமை அலுவலகத்தில் தொண்டர்களை விஜயகாந்த் சந்தித்தது, கட்சியினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக உலல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற வரும் விஜயகாந்தின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக தகவல் பரவியது. இது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, அது வதந்தி என்றும், பிறந்தநாளன்று அவர் தொண்டர்களை சந்திப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது. தன்னுடைய உடல்நலன் பற்றி யாரும் நம்ப வேண்டாமெனவும், தான் நலமுடன் இருப்பதாகவும், தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்களை தன் பிறந்தநாளை முன்னிட்டு நேரில் சந்திப்பதாவும் விஜயகாந்த் நேற்று அறிக்கை பகிர்ந்து தெரிவித்திருந்தார். மேலும் தொண்டர்கள் யாரும் தன்னைப் பார்க்க வரும்போது சால்வை, மாலை உள்ளிட்ட அன்பளிப்புகளை தவிர்க்குமாறும் விஜயகாந்த் தன் அறிக்கையில் கோரியிருந்தார்.
இதையடுத்து, இன்று தனது 71வது பிறந்தநாளை முன்னிட்டு விஜயகாந்த் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகம் வருகை தந்தார்.
தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் ரசிகர்களை விஜயகாந்த் இன்று தன் கட்சி அலுவலகத்தில் சந்தித்து வருகிறார். சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் கட்சி தொண்டர்களை விஜயகாந்த் சந்தித்து வரும் நிலையில், இன்று காலை முதலே அங்கு ரசிகர்களும் கட்சித் தொண்டர்களும் கூடத் தொடங்கினர். அவர்களையும் சந்தித்து வருகிறார்.
இந்த காட்சிகள், தேமுதிக கட்சித் தலைமை அலுவலகத்தில் எல்.இ.டி திரை வைத்து ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. மேலும், பல்வேறு, கலை நிகழ்ச்சிகளுக்கும் நடைபெற்று வரும் நிலையில், விஜயகாந்த் பட பாடல் வரிகளுக்கு ஏற்ப தொண்டர்கள் நடனமாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விஜயகாந்த் மேடைக்கு வரும்போது, தவசி படத்தின் ‘ஏலே இமயமலை’ பாடல் பின்னணியில் ஒலிக்க விஜயகாந்த் மேடைக்கு அழைத்து வரப்பட்ட நிலையில், உற்சாகமாக தொண்டர்களைப் பார்த்து கையசைத்தார். உடல்நிலை காரணமாக தொண்டர்களை சந்திப்பதை சில காலமாக விஜயகாந்த் தவிர்த்து வந்த நிலையில், அவரை சிறு இடைவெளிக்குப் பிறகு நேரில் சந்தித்த தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர்.
நடிகர் விஜயகாந்த் ஒவ்வொரு ஆண்டும் தன் பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாகக் கடைபிடித்து வருவதுடன், பல்வேறு நலத்திட்டப் பணிகளையும் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

- பசுமைப்புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவு : தலைவர்கள் இரங்கல்..!பிரபல வேளாண் விஞ்ஞானியும் இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படுபவருமான எம்.எஸ்.சுவாமிநாதன் நேற்று (செப்.,28) … Read more
- ஜெயம் ரவி நடித்த ‘இறைவன்’ திரைவிமர்சனம்..!சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்குப் பிறகு, ஜெயம் ரவியின் மார்க்கெட் தொடர்ந்து உயர்ந்து கொண்டேதான் … Read more
- ஆசிய விளையாட்டு : பெண்கள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம்..!துப்பாக்கி சுடுதல் பெண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனைகள் தங்கம், வெள்ளிப்பதக்கம் … Read more
- வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி..!வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இந்த ஆண்டுக்கான தென்மேற்கு … Read more
- குற்றவழக்குகளில் தொடர்புடையவருக்கு பா.ஜ.க.வில் பதவி..!இருநூறுக்கும் மேற்பட்ட குற்றவழக்குகளில் தொடர்புடைய ஒருவருக்கு பா.ஜ.க.வில் மாநில பதவி வழங்கியிருப்பது அக்கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி … Read more
- வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் 215 பேருக்கு தண்டனை வழங்கி பரபரப்பான தீர்ப்பை வெளியிட்டுள்ளது.வாச்சாத்தி … Read more
- ‘ஹிட்லர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு..!இயக்குநர் தனா இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிக்கும் “ஹிட்லர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.விஜய் ஆண்டனியின் … Read more
- குமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளராக தளவாய் சுந்தரம் நியமனம்..!அதிமுகவில் குமரி கிழக்கு மாவட்டச் செயலளராக தளவாய்சுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார்.ஜெயலலிதா முதல்வராக இருந்த காலையில் ஒன்றுபட்ட குமரி … Read more
- சிவகாசி அருகே, பூட்டியிருந்த பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து..!விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள பாறைப்பட்டி பகுதியில், பட்டாசு கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் … Read more
- திருப்பங்கள் தந்திடும் திருப்பாம்பரம் கோயிலில் இராகு,கேது பெயர்ச்சி !அஷ்டமா நாகர்களும் தனித்தனியாக வழிபாடு செய்துள்ள வெவ்வேறு பழம்பெருமை வாய்ந்த தலங்கள் பல இருப்பினும்இந்த எட்டு … Read more
- நற்றிணைப் பாடல் 260:கழுநீர் மேய்ந்த கருந் தாள் எருமைபழனத் தாமரைப் பனிமலர் முணைஇ,தண்டு சேர் மள்ளரின் இயலி, அயலதுகுன்று … Read more
- சிந்தனைத்துளிகள்உலகில் இருக்கக் கூடிய பழங்கள் ஒன்று சேர்ந்து ஒரு மாநாட்டைக் கூட்டின.எந்தப் பழம் அதிகச் சுவையுடையது, … Read more
- பொது அறிவு வினா விடைகள்ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம் (UNDP). இந்தோசீனா போர் 1946 – ஏப்ரல் 1975 க்கு … Read more
- குறள் 537:அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்கருவியால் போற்றிச் செயின். பொருள் (மு.வ): மறவாமை என்னும் கருவிகொண்டு (கடமைகளைப்) … Read more
- முதல்முறையாக சாலைகளில் போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டி வரும் நபர்களை கண்காணித்து, புகைப்பட பிரிண்டிங் செய்யும் ரேடார் கருவியை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார் – எஸ்பி. ஹரி கிரண் பிரசாத்கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் முதல்முறையாக சாலைகளில் போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டி வரும் நபர்களை … Read more
