

குழந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை அன்புடன் அரவணைத்து நாம் இருக்கிறோம் என்று அவர்களுக்கு ஆறுதல் அளித்தாலே புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் குணமடைய உதவும்: மோனிகா ரானா, மதுரை கூடுதல் ஆட்சியர்..,
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தை அக்க்ஷயா ஸ்ரீ (வயது6) குத்து விளக்கு ஏற்றினார். மேலும், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 4 குழந்தைகள் பங்கேற்றனர்.
மதுரை பெரியார் நகர் சேர்மதாய் வாசன் கல்லூரியில், குழந்தை பருவ புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
கல்லூரி மாணவிகளிடம் குழந்தை புற்று நோய் விழிப்புணர்வு கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட “மதுரை மாவட்ட கூடுதல் ஆட்சியர் மோனிகா ராணா, மதுரை ராஜாஜி மருத்துவமனை புற்றுநோயியல் துறை தலைவர் டாக்டர் ராஜ சேகர், குழந்தைகள் புற்றுநோய் மண்டல இயக்குநர் (Cankids) லலிதா மணி, சேர்மத்தாய் வாசன் கல்லூரி முதல்வர் கவிதா மற்றும் கல்லூரி இணைச் செயலாளர் பாலகுரு ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில், நேருயுவ கேந்திரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்
குமார் வரவேற்புரை கூறினார். சிறப்பு விருந்திரராக மதுரை மாவட்ட கூடுதல் ஆட்சியர் மோனிகா ராணா கூறுகையில்..,
புற்றுநோயால் பாதித்தப்பட்டவர்களுக்கு நாம் இருக்கிறாம் என ஆறுதல் முக்கியம்.
நிராகரிக்கப்பட்டவர்கள் என, மன வேதனையுடன் உள்ளவர்களை நாம் அவர்களுடன் உள்ளோம் உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம் என கூறுங்கள். அதுவே, அவர்களுக்கு புதிய நம்பிக்கையும் பலத்தையும் கொடுக்கும். புற்றுநோய் என்பது மிகவும் கோரமானது.
இதில், குழந்தைகளுக்கு புற்றுநோய் பற்றி யாருக்கும் விழிப்புணர்வு இல்லை.
புற்றுநோய், கொரன போன்ற உயிர் கொல்லி நோய்களை கண்டு மிகவும் பயப்படுகிறோம். புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களை ,நாம் சரிவர கவனிக்காமல் சமூகத்தில் ஒதுக்கி வைக்கின்றோம்.
இதனால், அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. அவர்களை நாம் ஆதரவோடு அரவணைத்தால் புற்று நோய் பாதிக்கப்பட்டவர்களை நாம் புற்று நோயிலிந்து மீட்டெடுக்க உதவும்.
குறிப்பாக, புற்று நோய் பாதிக்கப்பட்டவர்களை அரவணைத்து சிகிட்சையளித்து மன ஆறுதல் வழங்கினால், அவர்கள் மீண்டு வர உதவும். கேன்கிட்ஸ் என்ற தன்னார்வ அமைப்பு குழந்தை நலனில் அக்கறை கொண்டு சிகிட்சை வழங்கி வருகிறது.
இது போன்ற தன்னார்வ அமைப்புகள் பல்வேறு உதவிகள் வழங்கி நோயிலிருந்து மீட்டெடுக்க உதவும்.
இதற்கான அவசர உதவி எண் 104 இதில் தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீங்கள் உதவி செய்து மற்றவர்களுக்கும் தெரிவியுங்கள் என, கூடுதல் ஆட்சியர் .மோனிகா ராணா கூறினார்.


