


மதுரை மாவட்டம், சமயநல்லூர் அருகே பரவை கற்பகம் மெட்ரிகுலேஷன் பள்ளியில், எஸ். கே.எம். உலக சிலம்பம் டிரஸ்ட் மற்றும் ஸ்ரீராம் கல்வி விளையாட்டு அகாடமியும் இணைந்து நடத்தும் நான்காம் மாநில அளவிலான சிலம்பம் போட்டி நடந்தது. இந்த போட்டிக்கு, சிவகங்கை ராஜ்குமார் மகேஸ் துரை தலைமை தாங்கினார். பள்ளி நிறுவனர் ராமு, வழக்கறிஞர் படேல் ஆகியோர் முன்னிலையில் வகித்தனர்.
மாவட்ட விளையாட்டு துறை அதிகாரி ரமேஷ், போட்டிகளை துவக்கி வைத்தார்.
இந்த போட்டியில், மதுரை, ,திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, உள்ளிட்ட 10 மாவட்டங்களைச் சேர்ந்த 400 மாணவ, மாணவிகள்
கலந்து கொண்டு விளையாடினர்.
இந்த போட்டிகளில், பரவை முத்துநாயகி சிலம்பு அணி , ஆசான் இளங்கோவன் தலைமையில் அதிகபரிசுகளை வென்று சுழல் கோப்பையை கைபற்றி சாம்பியன் பட்டம் பெற்றது. முடிவில், எஸ். கே.எம்.உலக சிலம்பம் டிரஸ்ட் நிறுவனர் சிலம்ப ஆசான் மாரிமுத்து நன்றி கூறினார்.

