சோழவந்தான் பேட்டை அரசு நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் துவங்கப்பட்டது. பேரூராட்சி 1வது வார்டு கவுன்சிலர் ஈஸ்வரி ஸ்டாலின் தலைமை வகித்து துவக்கி மாணவ மாணவியருக்கு உணவுகளை பரிமாறினார். பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் முருகானந்தம் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் லலிதா பேபி வரவேற்றார். சமுதாய வள பயிற்றுனர் செல்வி, வரி தண்டலர்கள் வெங்கடேசன் கண்ணதாசன், பள்ளி மேலாண்மை குழு ரமேஷ், பேரூராட்சி பணியாளர்கள் வேணுகோபால், கௌதம் மற்றும் பொதுமக்கள், சமூக ஆர்வலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.