• Sun. Feb 15th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

முதலமைச்சரின் காலை உணவு விரிவாக்க திட்டம்.,

BySubeshchandrabose

Aug 26, 2025

தமிழக முதலமைச்சரின் காலை உணவு திட்டம் நகர்ப்புற பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் செயல்படுத்த முதலமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்கத்தினை இன்று தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காணொளி காட்சி வழியாக துவக்கி வைத்தார்

அதனைத் தொடர்ந்து தேனி நகராட்சிக்குட்பட்ட பங்களா மேடு பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் துவங்கியது

இந்த நிகழ்ச்சியில் தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங், தேனி எம்.பி தங்க தமிழ்ச்செல்வன், சட்டமன்ற உறுப்பினர், நகர் மன்ற தலைவர், நகர் மன்ற உறுப்பினர்கள் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் அமர்ந்து உணவு உட்கொண்டனர்

முதலமைச்சரின் இந்த காலை உணவு திட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு பொங்கல், கேசரி உள்ளிட்டவை காலை உணவாக வழங்கப்பட்டது

குழந்தைகளுக்கு வழங்கப்படும் காலை உணவு தரமாக இருக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் உணவு தயார் செய்யும் மகளிர் குழுவிடம் அறிவுரை கூறி சென்றனர்.